×

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு எச்.ராஜா மீது கமிஷனர் ஆபீசில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை சில கோயில்கள் முன்பாக நடந்த சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இணையதளத்தில் கோவை சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, பாமக நிறுவனர் பதிவுக்கு மறுத்து மர்ம நபர்கள் அல்ல, ராமகிருஷ்ணன் நடத்தும் தந்தை பெரியார் திராவிட கழகம்தான் என பதிவு செய்துள்ளார். காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளி என்ற கஜேந்திரன் என்பவரை கூறியுள்ளனர். எனவே, திட்டமிட்டு உண்மைக்கு புறம்பான தகவலை மக்கள் மத்தியில் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக தலைவர்கள் மற்றும் கழகத்திற்கு  அவப்பெயரை உருவாக்கும் வகையிலும், இருவேறு பிரிவினர் இடையில் கலவரத்தை தூண்டும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 499, 505, 506 பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Tags : Office ,Commissioner ,H. Raja , social website, the defamation record, H. Raja, Commissioner's Office, complained
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...