×

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம்: 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கெடு

சென்னை: தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணங்களை நிர்ணயம் செய்து கொள்ள 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்று கட்டணக் குழு அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதை அடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் 2019-2020ல் செலவிடப்பட்ட செலவினங்களை 26ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் காலக் கெடு நீட்டிக்கப்படாது. இணையதளத்தில் பதிவேற்றும் முன்னதாக அனைத்து ஆவணங்களையும் தயாராக கணினியில் பதிவேற்றி வைத்துக் கொண்டால் தான் இணையதளத்தில் அந்த ஆவணங்களை பதிவேற்ற முடியும். ஒரு ஆவணத்தை தவறவிட்டாலும்கூட விண்ணப்பத்தை சப்மிட் செய்ய முடியாது. மின்னஞ்சலில் அனுப்ப சொன்னால் அதில் அனுப்பலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Schools , Private Schools, Fee Set, 26th, Deadline to Apply
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...