அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்ய அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தொழிலாளர் துறையின் கீழ், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உள்பட 17 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இயங்கி வருகின்றன.  

இவ்வாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை இனி பதிவு செய்ய அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 17 வாரியங்களிலும் தங்களது பெயர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளும் வசதி, 19.6.2020 முதல் ஏற்படுத்தப்பட்டு 20.7.2020 முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. 21.7.2020 வரை தமிழகத்தில் 17 அமைப்புசாரா நல வாரியங்களில் 54,255 தொழிலாளர்களிடமிருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: