×

நானும் ரவுடிதான்: தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக சீனா அறிவிப்பு

பீஜிங்: கொரோனாவுக்கு யார் முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்ற போட்டி உலகளவில் நடந்து வருகிறது.  இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்து, மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக, தான் கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தும் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக சீனா நேற்று அறிவித்தது. இது பற்றி சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதாக, லான்செட் மருத்துவ இதழில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

சீனா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் முதல் கட்ட ஆய்வில் 508 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இவர்களில் 253 பேருக்கு அதிகளவும், 129 பேருக்கு குறைந்தளவும் மருந்து கொடுக்கப்பட்டது.  தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட முதல் 30 நிமிடங்களும், அதன் பின்பு, 14 முதல் 28 நாட்கள் வரையிலும் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்று கண்காணிக்கப்பட்டது. 28 நாட்களுக்கு பிறகு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டது. இதில், அதிகளவு மருந்து எடுத்து கொண்ட 253 பேரில் 241 பேரிடமும் (95%), குறைந்தளவு மருந்து உட்கொண்ட 129 பேரில் 118 பேரிடம் (91%) டி செல் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* நோய் இல்லாதவர்களிடம் நடத்தப்பட்ட சோதனை
‘சீனாவின் தடுப்பு மருந்து, கொரோனா வைரஸ், சார்ஸ் சிஓவி-2 உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்படவில்லை. சாதாரண மக்களிடம் நடத்தப்பட்டு உள்ளதால், இந்த மருந்தின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பானது என்று கூற முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்து இந்த மருந்தை பரிசோதிக்க வேண்டும். அப்போது தான், இதன் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிட முடியும்,’ என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : China , Me too Rowdy, Vaccine, Success, China, Announcement
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...