×

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் தலா 2 மாஸ்க்: தமிழக அமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 மாஸ்க் வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கொரோனா நோயால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் மனநல அறிவுரைகள் வழங்க சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவொற்றியூர் மண்டத்தில் 3.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அதில் 3,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு 2,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 100 சதவீதம் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். ஊரடங்கு நேரங்களில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதில் திருவொற்றியூர் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசம் என மொத்தம் சுமார் 13 கோடி முகக்கசவம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கடந்த மாதம் அறிவித்தார். அந்தபணி மிக விரைவில் தொடங்கப்படும். குறைந்த விலையில் தரமான மாஸ்க் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

Tags : family card holders ,Minister of Information , Family Cardholder, Ration, 2 Masks per, Tamil Nadu Minister, Information
× RELATED பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பிறகு...