×

மபி கவர்னர் மறைவு தமிழக பாஜ தலைவர் இரங்கல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: பாஜ மூத்த தலைவரும், மத்திய பிரதேச கவர்னருமான லால்ஜி டாண்டன் மறைவு அதிர்ச்சியையும், துக்கத்தையும் அளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் கட்சி வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியவர். சட்ட திட்டங்களில் மிகவும் நுணுக்கமான அறிவு பெற்றவர். மறைந்த பிரதமர் அடல்ஜியுடன் அவருக்கு இருந்த நெருக்கமும், மரியாதையும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. இக்கட்டான சூழ்நிலையில் தமிழக பாஜவின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர் மறைவினால் வாடும் குடும்பத்தாருக்கும், மத்திய பிரதேச மக்களுக்கும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Mabi ,Tamil Nadu ,BJP ,governor ,death , Mabi Governor, demise, Tamil Nadu BJP leader, condolences
× RELATED வாக்குகளை பிரிப்பவர்களின் கையை...