×

வாடிப்பட்டி பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் உயிரோடு விளையாடும் மின்வாரியம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபயாம் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் வாடிப்பட்டி மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உயிரோடு விளையாடி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே தனியார் பள்ளிகள், கல்லூரி மற்றும் தங்கும் விடுதிகள், இறைவாக்கு இல்லம் உள்ளிட்டவை செயல்பட்டு வரும் பகுதியில் மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இந்த மின்கம்பத்திலிருந்து செல்லும் உயரழுத்த மின்கம்பிகள், தொட்டுவிடும் தூரத்தில் தாழ்வாக செல்கின்றன. சாய்ந்துவிழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி இப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாழ்வாக செல்லும் மின்கம்பியால் சிறிய வாகனம் சென்றால் கூட மின்கம்பியில் வாகனம் உரசி விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால், பொதுமக்கள் வேறு வழியின்றி தற்காலிகமாக கம்புகளை முட்டுக்கொடுத்து தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பிகளை தூக்கி நிறுத்தியுள்ளனர். இருப்பினும் சில நேரங்களில் காற்றுக்கு அந்த கம்புகள் கீழே விழுந்து விடுவதால் மின்கம்பமும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்திலேயே வசித்து வருகின்றனர். பொதுமக்கள் உயிரோடு விளையாடாமல் வாடிப்பட்டி மின்வாரிய அதிகாரிகள், சாய்ந்த விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை புதிதாக மாற்றி, தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை உயரத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.Tags : area ,Vadippatti , Vadippatti, power lines, power board
× RELATED மயிலாடுதுறை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு