×

இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் முதல் பெருநகரம் சென்னைதான்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளும் முதல் பெருநகரம் சென்னைதான் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியில் கூறியுள்ளார். நாள்தோறும் 15,000 வரை பரிசோதனைகள் மேற்கொள்கிறோம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மக்கள் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஒருமுறை வெளியே சென்றால் 10 நாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர 4,92,149 பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்தது. இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று மட்டும் 1,130 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 88,377ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,952 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 1,475 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



Tags : Chennai ,Prakash Patti ,India ,Corona , Chennai, Corona
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...