×

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒரே நாளில் ரூ.9,703 கோடி சொத்து சேர்த்து சாதனை

வாஷிங்டன்: அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார். 13 பில்லியன் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.9,703 கோடி ஆகும்.

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து பல்வேறு கட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுத் தொற்றின் அளவை கட்டுப்படுத்தி வர முயற்சி செய்யப்பட்டாலும் தினமும் கொரோனாவால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொரோனாவுக்கு அஞ்சி மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் காரணத்தால் தற்போது அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் அமேசானுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால் அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிவரும் அமேசான் நிறுவனத்தின் சொத்துமதிப்பு திடீரென்று உயர்ந்தது. அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

உலக அளவில் அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தால் இந்த ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவின் பொருளாதாரமே சரிந்துவரும் நிலையில் அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்பானது அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது.



Tags : Jeff Bezos ,Amazon , Amazon, property
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...