×

தங்கக்கடத்தல் வழக்கில் ரகசிய தொடர்பு... நடவடிக்கை எடுக்க வேண்டும் : கேரள முதல்வர் பினராயி விஜயனின் கழுத்தை நெறிக்கும் எதிர்கட்சிகள்!!

திருவனந்தபுரம் : கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரகசிய தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. எர்ணாகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரன், இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார். அண்மையில் தற்கொலைக்கு முயன்ற ஐக்கிய அமீரக துணை தூதர் அட்டஷிவின் மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ்-க்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாக சுரேந்திரன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

மெய்க்காப்பாளர் ஜெய்கோஷ் தான் பினராயி விஜயனை சிக்க வைக்கும் கன்னி என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கட்சி கொள்கையில் இருந்து விலகிய பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீத்தாராம் யெச்சூரிக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். ரமேஷ் சென்னிதலா எழுதியுள்ள கடிதத்தில்,``சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினரான பினராயி விஜயன் தலைமையில் நடக்கும் அரசு ஊழல், குற்ற நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது.

கேரளத்தை உலுக்கிய தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் முதல்வர் அலுவலகத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சான்றுகள் வெளியே வந்துள்ளன. முதல்வர் பினராயி விஜயனின் செயலாளராக இருந்த சிவசங்கரன், தன் அதிகாரத்தைத் தவறாகப் பயப்படுத்தியுள்ளதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐ.டி துறையில் முறைகேடாகப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அரசின் எல்லாத் துறைகளும் முதல்வரின் கீழ்தான் வரும். ஆனால், தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் கூறுவது அபத்தமான பதிலாகும். எனவே, கட்சி கொள்கையில் இருந்து விலகிய பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags : Binarayi Vijayan ,Opposition parties ,Kerala , Gold smuggling, case, Kerala Chief Minister, Binarayi Vijayan, Opposition
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு