×

உய்கார்ஸ் முஸ்லீம் மீது மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்த 11 சீன நிறுவனங்களுக்கு தடை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி ஆக்ஷன்!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள 11 சீன நிறுவனங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது.  சீனாவிற்கு எதிராக உலகின் முன்னணி நாடுகள் களமிறங்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்தியா,அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளது. இதன் விளைவாக டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியது.

இந்த நிலையில் தற்போது சீனாவின் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க தொடங்கி உள்ளது. அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் தற்போது ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்களின் பொருட்களுக்கு, சேவைகளுக்கு, தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்ட்டது. தற்போது 11 சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மையினரை குறி வைத்து, சீனாவின் பிரச்சாரத்தில் மனித உரிமை மீறல்களுக்கு நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் திங்கட்கிழமையன்று 11 நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க தொழில் நுட்பம் மற்றும் தயாரிப்புகள் வாங்குவதை அமெரிக்கா தடை செய்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள், ரால்ப் லாரன், கூகுள், ஹெச் பி, டாமி ஹில்ஃபிகர், நான்சாங்க் ஓ -பிலிம் டெக் ஹ்யூகோ பாஸ் மற்றும் முஜி உள்ளிட்ட நிறுவனங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் சப்ளையர்களும் உள்ளதாக அறிக்கை ஒன்று கூறியுள்ளது.


Tags : Donald Trump ,US ,Uyghurs Muslims ,Chinese ,companies ,Muslims , Uyghurs, Muslim, Human Rights Violations, 11 Chinese Companies, Prohibition, US President, Donald Trump, Action, Action
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...