×

அசாமை தொடர்ந்து மேகாலயா மாநிலத்திலும் கனமழை...! பல்லாயிரக்கணக்கான பொருட்கள் நீரில் மூழ்கி நாசம்!!!

மேகாலயா:  அசாம் மாநிலத்தை தொடர்ந்து மேகாலயாவிலும் கனமழை கொட்டி வருவதால் பல்லாயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் மேற்கு கௌரோஹில்ஸ் என்ற இடத்தில் அதிகளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,  இங்குள்ள 175 கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், 24 மணி நேரத்தில் 5 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, விலைமதிப்பற்ற உயிர்கள் மட்டுமல்லாது, அதிகளவில் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் முகுல் சக்மா கூறியுள்ளார். தொடர் கனமழையால் மேகாலயாவில் எங்கு பார்த்தாலும், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதேபோல் அசாம் மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக பெய்த கனமழையால் சுமார் 33 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 27 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 லட்சம் பொதுமக்கள் தங்கும் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும், அசாமில் பிரம்மபுத்திரா நதி, தன்ஷிரி, சிகாப்ரோலி உள்ளட்ட பல்வேறு நதிகளில், இன்று மாலைக்குள் வெள்ளம் அபாய குறியீட்டை தாண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில், கோல்பாரா மாவட்டம் மிகவும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், அசாமின் பாதிப்புகள் நாட்டின் கவனத்தை பெறவில்லை என்று இந்தி நடிகர் அணில் உசைன் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags : Assam ,Meghalaya ,Tens of thousands , Heavy Rain in Meghalaya
× RELATED தொடர்மழையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு