×

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு தடை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சச்சின் பைலட், ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.  நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ராஜஸ்தான் ஐகோர்ட் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவர் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.



Tags : Ashok Kejriwal ,Rajasthan ,Congress MLAs ,Ashok Gelat ,Sachin Pilot , Rajasthan, Ashok Gelat, Sachin Pilot
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...