×

மாஸ்க் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு என்னைவிட அதிக தேசப்பற்றுமிக்கவர் யாரும் இல்லை ' - அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்..!!

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அது உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மட்டுமே தற்போதைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது. பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சில நாட்டு தலைவர்களே அதனை பின்பற்றாமல் இருந்து வந்தனர். அதிலும் முக்கியமாக, கொரோனா பரவலில் அதிகம் பாதிக்கப்பட்ட முதலிரு நாடுகளான அமெரிக்கா, பிரேசில் நாட்டு அதிபர்கள் மாஸ்க் அணியாமல் பிடிவாதமாய் இருந்து வந்தனர்.

இதனிடையே மாஸ்க் ஏதும் அணியாமல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வந்த பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ, கோர்ட் அபராதம் விதித்து மாஸ்க் அணியுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்பும், பல வல்லுநர்கள் அறிவுறுத்தியும் மாஸ்க் அணிவதை தவிர்த்து வந்தார். இதனால் விமர்சனத்திற்கு உள்ளானது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெய்லீ, ‛மாஸ்க் அணிவது டிரம்ப்பின் தனிப்பட்ட விருப்பம், என்றார். இந்நிலையில் வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஒரு ராணுவ மருத்துவ நிலையத்தில் காயமடைந்த வீரர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களை டிரம்ப் சந்திக்க சென்றபோது முதன்முறையாக மாஸ்க் அணிந்து சென்றார்.

அப்போது முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது மாஸ்க் அணிந்து கொள்கிறார். இந்நிலையில், மாஸ்க் அணிவதை தேசப்பற்றுடன் ஒப்பிட்டு டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: நாம் அனைவரும் இணைந்து கண்ணுக்குத் தெரியாத சீன வைரசை தோற்கடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலையில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் என பலர் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் உங்கள் விருப்ப அதிபரான என்னை விட யாரும் அதிக தேசப்பற்றுமிக்கவர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags : Trump ,US , Trump tweets image of himself wearing a mask and calls it 'patriotic'
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்