×

கம்பத்தில் பலத்த மழையால் தகர்ந்த தார்ச்சாலை: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

கம்பம்: கம்பத்தில் பலத்த மழையால் தார்ச்சாலை தகர்ந்து போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் நகரில் கம்பம் மெட்டு அடிவாரத்தில் சேனை ஓடை உருவாகி கம்பமெட்டு காலனி வழியாக தாத்தப்பன்குளத்தை கடந்து, பின்னர் நகர்ப்பகுதியைத் தாண்டி வீரப்பநாயக்கன் குளத்துக்கு செல்கிறது. இந்த சேனை ஓடை காலப்போக்கில் ஆக்கிரமிப்பால் குறுகி கழிவுநீர் ஓடையாக மாறிவிட்டது.

இதனால், கொஞ்சம் மழை பெய்தாலும் சேனை ஓடை நிரம்பி, அருகில் உள்ள வீடுகளில் கழிவுநீர் புகும். பொதுப்பணித்துறை பராமரித்தாலும், இதுவரை ஓடையை தூர்வாரவில்லை. இந்நிலையில் நேற்று கம்பத்தில் பெய்த மழையால் சேனை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நகரில் புதுப்பள்ளிவாசல் பின்புறம் உள்ள 8வது வார்டு பகுதியில் மழை வெள்ளத்தால் தார்ச்சாலை தகர்ந்து அடித்துச் செல்லப்பட்டது. தார்ச்சாலையை ஒட்டியுள்ள மின்கம்பம் கவிழ்ந்து விழும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : Darshala ,Public , Pole, heavy rain, tar road, transport, public
× RELATED சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை