×

கொரோனா முன்னெச்சரிக்கை: தஞ்சை மாநகராட்சி கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் வரும் 31-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு

தஞ்சை: தஞ்சை மாநகராட்சி கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் அதிகம் கொரோனா பரவி வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவுத்துள்ளது. மேலும் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கும்பகோணம் அருகே தாரசுரம் காய்பறி மார்க்கெட் மூலம் கடந்த வாரம் பலருக்கு கொரேனா தொற்று ஏற்பட்டது. ஆகையால் காய்கறி மார்க்கெட்க்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் பலருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் 31-ம் தேதி வரை மாலை 4 மணிக்கு மேல் வெளியே வர தடை செய்யப்பட்டுள்ளது. காலையில் கடைகளுக்கு செல்வோர் கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : stores ,Tanjore Corporation Kumbakonam ,Pattukottai Municipalities ,Tasmac , Corona Precaution, Tanjore Corporation Kumbakonam, Pattukottai Municipalities, time, Tasmac stores ,31st
× RELATED `பார்’ ஆக மாறிய பெட்டிக்கடைகள்