×

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்!: கடத்தல் பணத்தை கொண்டு சினிமாவுக்கு பைனான்ஸ் செய்ததாக பைசல் பரீத் தகவல்!!!

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் தங்கக்கடத்தல் வழக்கில் தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னாவின் சினிமா தொடர்பு விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது. கடத்தல் பணத்தை கொண்டு சினிமாவில் முதலீடு செய்ததாக பரீத் தகவல்களை தெரிவித்துள்ளார். தங்கக்கடத்தல் வழக்கில் தங்கராணி ஸ்வப்னா அவரது கூட்டாளி சந்திப் நாயர் ஆகியோரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், அவர்களை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தினசரி புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஸ்வப்னாவின் ஏற்பாட்டின் பேரில் வெளிநாட்டில் இருந்து தூதரகம் பெயரில் தங்கக்கட்டிகளை அனுப்பியது துபாயில் பதுங்கியிருந்த பைசல் பரீத் என்பது தெரியவந்தது. எனவே பைசல் பரீத்தை பிடிக்க இன்டர்போல் போலீஸ் உதவி கோரப்பட்டது. அதன்படி பைசல் பரீத்தை துபாய் போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தும் ஏற்பாடுகளும் தீவிரமடைந்திருக்கின்றன. வந்தே பார்த் விமானம் மூலம் பைசல் பரீத்தை நேரடியாக கொச்சிக்கு அழைத்துவரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கிடையில் பைசல் பரீத்தின் பின்னணி குறித்தும் என்.ஐ. நடத்திய விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

பைசல் பரீத் தங்கக்கட்டிகள் மூலம் கிடைத்த பணத்தில் கேரள சினிமாவில் முதலீடு செய்த தகவலும் தற்போது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக மூத்த இயக்குனர் ஒருவர் படத்திற்கும், அதேபோன்று இன்றைய தலைமுறை இயக்குனர் படத்திற்கும் பைசல் பரீத் பைனான்ஸ் செய்திருக்கிறார். அதனை நேரடியாக அல்லாமல், தமது நண்பர் பெயரில் பினாமியாக அவர் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இப்படியாக கேரள திரையுறகில் 4 சினிமாக்கள் எடுக்க பைசல் பரீத் பணம் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே பைசல் பரீத்தை என்.ஐ.ஏ. விசாரணைக்கு உட்படுத்தும் போது இது தொடர்பான தகவல்களை சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பைசல் பரீத் துபாயில் இருந்து தங்கக்கட்டிகளை அனுப்பிய விவகாரத்தில் அவருக்கு பின்னணியாக இருந்தது ராபின்ஸ்  என தெரியவந்திருக்கிறது. இந்த ராபின் மூவாட்டுப்புழா மாவட்டத்தை சேந்தவர். இவரும் துபாயில் உள்ளார். மேலும் இவர் ஹவாலா ஏஜென்ட் என கூறப்படுகிறது. ராபின்ஸ ஏற்பாட்டின் பேரிலேயே பைசல் பரீத் தங்கக்கட்டிகளை அனுப்பியதும் தெரியவந்திருக்கிறது. தற்போது பைசல் பரீத் கைது செய்யப்பட்டுவிட்டாலும் அவரை இயக்கிய ராபின்ஸை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பணம் போட்ட ஹவாலா ஏஜென்டுகளுக்கு தங்கத்தை பிரித்து கொடுக்கும் வேலையை ஜலால் என்பவர் கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜலால் முகமதை அண்மையில் துபாய் போலீஸ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Faisal Pareeth ,Kerala , Kerala gold smuggling case !: Faisal Pareeth reports that he has accounted for the cinema with the smuggling money !!!
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...