×

'கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்காதே.... அதிக மின் கட்டண வசூலுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டம்!!

சென்னை : தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

*தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு செலவுகளை விட மின்கட்டணத்தை பார்த்துதான் பலருக்கும் ஷாக் அடிக்கிறது. நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்தது.

*இதையடுத்து, மின்சாரா வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் , ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அடிப்படையில் கட்டணம் கணக்கிட முடியாது,

*பழைய மின் கட்டண தொகையை அடிப்படையாக கொண்டே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என மின்சார வாரியம் விளக்கம் கொடுத்தது.

திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்


*இந்நிலையில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து வரும் இன்று தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

*திமுகவினர் அவரவர் வீடுகளிலும் கட்சி அலுவலகங்களின் முன்னாலும் கறுப்புக்கொடி ஏந்தி சமூக இடைவெளியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

*ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கோஷங்களை எழுப்பிவருகின்றனர்.

*திமுக எம்பி கனிமொழி அவரது வீட்டிலும், இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“மின் கட்டணம் செலுத்துவதில் சலுகை அறிவிக்கப்பட வேண்டும், தவணை முறையிலாவது கட்டணம் செலுத்த அனுமதியளிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

*சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

*குழப்பாதே குழப்பாதே ரீடிங் எடுப்பதில் குழப்பாதே... கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே கொரோனா காலத்தில் கொள்ளையடிக்காதே.. உள்ளிட்ட முழக்கங்களை எடப்பாடி அரசுக்கு எதிராக எழுப்பி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

*கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மின் கண்டன உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கறுப்புக்  கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

*பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் கிராமத்தில் மாநில நெசவாளர் அணி சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

*நாமக்கல்லில் திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஓசூர் சேலம், திருவாருர், மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் திமுக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

*குன்றத்தூரில் எம்.எல்.ஏ. அன்பரசன் தலைமையில் கறுப்புக் கொடி ஏந்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : DMK ,MK Stalin , Corona, robbery, high electricity bills, collections, MK Stalin, DMK, struggle
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி