×

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புதிதாக கொரோனா வார்டு அமைக்க எதிர்ப்பு: வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென சுற்றுவட்டார மக்கள் அச்சம்!!!

தஞ்சை:  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை கொரோனா வார்டாக மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் சாலையில், தமிழக அரசு சார்பில் புதிதாக வீட்டுவாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இதனை கொரோனா வார்டாக மாற்றுவதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராய் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை முதல் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கொரோனா வார்டாக செயல்படும் என்றார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாவது, கொரோனா நோயாளிகளை வீட்டுவாரிய குடியிருப்புகளில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்துள்ளனர். இதனால் இனிவரும் காலம் மழைகாலம் என்பதால், மறுபடியும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிரமம் ஏற்படும். மேலும், நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஏரியில் அல்லது விளைநிலங்களில் கண்டிப்பாக கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், விவசாயம் மட்டுமின்றி தண்ணீரை பயன்படுத்தும் ஆடு, மாடு போன்ற உயிரினங்களும் பாதிக்கப்படும்.

ஏனெனில் இதனை சமூக தொற்றாக காண்பதை விட பொருளாதாரரீதியான பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா வார்டு அமைய இருப்பதால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன்  பொருட்கள் உள்ளிட்டவை கிடைப்பதிலும் சிரமம் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதனால், மாவட்ட ஆட்சியர் இதனை கருத்தில் கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யவேண்டுமென்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : corona ward ,district ,Pattukottai ,Tanjore ,area , Opposition ,new corona ward , Pattukottai, Tanjore district,livelihood,affected !!!
× RELATED ஊரடங்கில் தளர்வுகள் வந்தும் விடியல்...