லக்னோ: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது மகன் அசுதோஷ் அறிவித்தார். உடல்நலக்குறைவால் ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உ.பி. மாநிலம் லக்னோவில் பிறந்த லால்ஜி டாண்டன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2009-ல் லக்னோ தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார். பீகார் மாநில ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் 20 ஜூலை 2019-ல் ம.பி. ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சலும் இருந்தது. தாண்டன் உத்தரபிரதேசத்தில் கல்யாண் சிங் அரசில் அமைச்சராகா இருந்து உள்ளார். பின்னர் பாஜக-பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியின் மாயாவதி ஆட்சியில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகவும் இருந்து உள்ளார். மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். லால்ஜி டாண்டனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.