×

வாலிபர் சடலம் மீட்பு

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (30) என்பது தெரியவந்தது. இவரை அடித்து கொலை செய்து தொங்க விட்டிருக்கலாம் என கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Valipar, corpse, recovery
× RELATED முத்துப்பேட்டையில் கோரையாற்றில் இளைஞர் சடலம் மீட்பு