×

செங்கல்பட்டு எஸ்பிக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு எஸ்பியாக இருப்பவர் கண்ணன். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய இவர், செங்கல்பட்டை தனி மாவட்டமாக ஏற்படுத்தியபோது, செங்கல்பட்டு எஸ்பியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக எஸ்பி கண்ணனுக்கு, காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர், அலுவலகத்துக்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதற்கிடையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு நேற்று மாலை வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10027 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 201 பேர் இறந்துள்ளனர். தற்போது எஸ்பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், எஸ்பி அலுவலகத்தில் அவருடன் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட போலீசார் பீதியடைந்துள்ளனர். எஸ்பி கண்ணன் தொடர்ந்து நிவாரணம் வழங்கும் நிகழ்சிகளில் கலந்து கொண்டார். அனைத்து கிராமங்களுக்கும் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள், மகளிர் குழுக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டங்களிலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Chengalpattu SP ,Chengalpattu ,SP , Chengalpattu SP, Corona
× RELATED செங்கல்பட்டு எஸ்பி அலுவலகம் அருகே ரூ.15...