×

திமுக எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு: திருப்போரூர் திமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனுவை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்போரூர் அருகே பொது இடத்தில் பாதை அமைப்பது சம்பந்தமான மோதல் தொடர்பாக திமுக எம்எம்ஏ  இதயவர்மன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கடந்த சில நாட்களுக்கு முன் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல், செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 17ம் தேதி, நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏ இதயவர்மன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ், இந்த வழக்குக்கும் திமுக எம்எல்ஏவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் அவர் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

கொரோனா நேரத்தில் மக்கள் பிரதிநியான திமுக எம்எல்ஏ இதயவர்மன் தொகுதியில் நோய்தடுப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என வாதாடினார். அதற்கு, அரசு  தரப்பு வழக்கறிஞர் இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளது. வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏவின் வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அதனை, மாலையில் விசாரிப்பதாக கூறி, நீதிபதி வசந்தலீலா, ஒத்திவைத்தார். பின்னர், மாலையில் விசாரித்த நீதிபதி, திமுக எம்எல்ஏவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, திமுக வழக்கறிஞர் அணியினர், மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில், ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags : DMK MLA , DMK MLA, bail petition, dismissal
× RELATED அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர்...