×

ரியல் மாட்ரிட் - லெகன்ஸ் டிரா முடிந்தது லா லிகா தொடர்: பார்சிலோனாவுக்கு ஆறுதல் வெற்றி

லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் டிரா செய்தது. பார்சிலோனா அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. ஸ்பெயினில் நடைபெற்று வந்த இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதின. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த தொடர், கடந்த மாதம் மீண்டும் தொடங்கி நடந்தது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணியை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ரியல்மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

எனினும், எஞ்சிய லீக் ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. கடைசி சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. ரியல் மாட்ரிட் - லெகன்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பார்சிலோனா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் அலாவெஸ் அணியை அபாரமாக வென்றது. கேப்டன் மெஸ்ஸி 2 கோல் அடித்து அசத்தினார். ரியல் மாட்ரிட் அணி 38 லீக் ஆட்டத்தில் 87 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பார்சிலோனா (82), அத்லெடிகோ மாட்ரிட் (70), செவில்லா (70), வில்லாரியல் (60) அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன.

Tags : Barcelona ,Legans ,La Liga ,Real Madrid , Real Madrid - Legans draw, finished, La Liga series, Barcelona, consolation win
× RELATED இந்திய மகளிர் அசத்தல்