×

வெஸ்ட் இண்டீசுக்கு 312 ரன் இலக்கு

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீசுக்கு 312 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (சிப்லி 120, ஸ்டோக்ஸ் 176). வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு சுருண்டது. 182 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, கடைசி நாளான நேற்று 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. ஸ்டோக்ஸ் 78, போப் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதைத் தொடர்ந்து, 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.


Tags : West Indies. , West Indies, 312, target
× RELATED 301 மில்லியன் டன்னாக நிர்ணயம் உணவு தானிய உற்பத்தி இலக்கு 1.5% அதிகரிப்பு