×

தோல் அரிப்பு தானே என அலட்சியம் வேண்டாம்: இதுவும் கொரோனா அறிகுறியே!

புதுடெல்லி: கொரோனா அறிகுறிகளை பொறுத்த வரையில் மக்களிடம் பெரிய குழப்பம் நிலவுகிறது. காய்ச்சல் வந்தால் கொரோனா, இருமினால் கொரோனா, தும்மினால் கொரோனா என, இதற்கு முன் மிக சாதாரணமாக இருந்தவை எல்லாம் இப்போது உயிர் பயத்தை ஏற்படுத்தும் வியாதிகளாக பார்க்கப்படுகின்றன. கொரோனா அறிகுறிகள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அந்த வகையில், காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றை போல தோல் அரிப்பு கூட கொரோனாவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. லண்டன் கிங்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில், சிலருக்கு தோல் அரிப்பு கொரோனாவின் ஆரம்ப கட்ட பாதிப்பாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 3.36 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், 8.8% சதவீதம் பேருக்கு தோல் அரிப்பு முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. தோல் அரிப்பு மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்ட 12 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 17 சதவீதம் பேரின் ஆரம்ப கட்ட அறிகுறியாக அரிப்பு இருந்துள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும் 5 பேரில் ஒருவருக்கு தோல் அரிப்பு உள்ளதாம். இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட டாக்டர்களில் ஒருவரான வெரோனிக் படாய்லி கூறுகையில், ‘‘பல வைரல் தொற்றுகள் தோலை பாதிப்பது வழக்கமானது. எனவே, கொரோனா நோயாளிகளுக்கு தோல் அரிப்பு ஏற்படுவது வித்தியாசமான ஒன்றல்ல. அரிப்பு ஏற்படுதல் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறாக இருக்கலாம். அதே சமயம், அரிப்புகள் கொரோனாவின் ஆரம்ப கட்டமாகவோ அல்லது அதுவே முக்கிய அறியாகவோ கூட இருக்கலாம். எனவே தோல் அரிப்பை சாதாரணமாக விட்டு விடக் கூடாது. அரிப்பு ஏற்பட்டாலும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது’’ என்றார்.

* திடீரென உடலில் தடிப்புகள் ஏற்படும். அவை சிவப்பு நிறமாக மாறி பயங்கர அரிப்பை ஏற்படுத்தும்.
* அம்மை போல தடிப்புகள் ஏற்படும். அவை நாள் முழுவதும் கூட நீடிக்கலாம்.
* கால், கை விரல்களில் சொரியாசிஸ் போன்று சிவந்து போகும், அரிப்பு ஏற்படும்.

Tags : Skin itching, indifference, this is also corona, symptom!
× RELATED பயணிகள் பலி எண்ணிக்கை தினமும்...