×

பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்த முயன்றவர் கைது

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் பெரியார் சிலை உள்ள  பகுதியில் நேற்று டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவரான பிரகாஷ் (44), பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்த வேகமாக ஓடி வந்தார். போலீசார் உஷாராகி அவரை தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து பிரகாஷ் மீது டவுன் போலீசார் மத கலவரத்தை தூண்டும் வகையில்  நடந்து கொண்டது உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Tags : Periyar ,statue , Periyar idol, saffron piece, attempted, arrested
× RELATED பெரியார் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை