×

நூலகங்கள் நாளிதழ் வாங்குவதற்கான ஒதுக்கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் நூலகங்கள் இயங்கி வருகின்றன. அதில் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நூலகங்களுக்கு வரும் மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், முதியவர்கள், எளியவர்கள் ஆகியோர் அங்கேயே அமர்ந்து படித்து பயன் பெறுகின்றனர். ஆனால் இந்த நூலகங்களுக்கு மொத்த ஒதுக்கீட்டில் இருந்து, 6.5 சதவிகிதம் ஒதுக்கீடுதான், இதழ்கள் வாங்குவதற்கு கொடுக்கப்படுகிறது. வெளிவரும் இதழ்களின் எண்ணிக்கை கூடினாலும், இதழ்களின் விலை கூடினாலும், வாசிப்பாளர்களின் எண்ணிக்கை கூடினாலும், நூலகத்திற்கு வழங்கும் ஒதுக்கீடு மட்டும் கூடாமலேயே இருக்கிறது.

இச்சூழலில் பத்திரிக்கை வெளியீட்டாளர்கள் சங்கத்தினர் இதழ் வாங்கும் ஒதுக்கீட்டாளர்கள் 6.5 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக மாவட்ட நூலகங்களுக்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளனர்.
எனவே, நூலகங்களுக்கு வரும் வாசகர்களின் கூடுதல் தேவையை கவனத்தில் கொண்டு, நூலகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒதுக்கீட்டை 6.5 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்ற பத்திரிக்கை வெளியீட்டாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை, தமிழக அரசு பரிசீலித்து விரைவில் நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் வாசகர்கள், ஊடகத்துறை மற்றும் பத்திரிக்கை துறை வளர்ச்சியடைய வழி வகுக்க வேண்டும்.

Tags : GK Vasan Libraries ,GK Vasan , Libraries newspaper, GK Vasan urges to increase quota by 20 per cent
× RELATED 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி