×

வீடுகளில் 27ம் தேதி கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்: மார்க்சிஸ்ட் முழு ஆதரவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜ அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும், திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரணம் எதையும் செய்யவில்லை.அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் வீடுகள்தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.


Tags : protest ,home , Homes, on the 27th, black flag, struggle, Marxist, full support
× RELATED திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே...