×

20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சிட்னி: இருபதே நிமிடங்களில், கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனையை ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெல்போர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் செயல்பாட்டை வைத்து கொரோனா தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஒரு துளி ரத்தத்தில், மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை மூலம் தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது மட்டுமின்றி, இதற்கு முன் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரா என்பதையும் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக பயன்படுத்தப்படும் ரத்த வகையின் அடிப்படையில், கொரோனா தொற்றை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் உருவாகிறதா என்பதை வைத்து தொற்று குறித்து கண்டுபிடிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைக்கு, ரத்த மாதிரிகளில் இருந்து 25 மைக்ரோலிட்டர்கள் பிளாஸ்மா தேவைப்படுகிறது. மேலும், இந்த சோதனையில் ரத்த சிவப்பணுக்களின் செயல்பாட்டை வைத்தும் கொரோனா தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

இந்த பரிசோதனை முறை, கொரோனாவினால் பாதிக்கப்படும் நாடுகள், மக்களுக்கு பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்தல், தொடர்புகளை கண்டுபிடித்தல், மருந்து பரிசோதனையில்,அந்த மருந்து செயல்படும் முறை குறித்தும் கண்டுபிடிக்க முடியும்.



Tags : Corona ,researchers ,Australian ,Test , Corona, Test, Australia
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...