×

மதுரையில் கொரோனா அதிகரிப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு

மதுரை: மதுரையில் கொரோனா அதிகரித்து வருவதால் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் பதிவாளர் தரப்பில் மனுதாக்கல் செய்த நிலையில் விரைவில் வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.

கொரோனா பரிசோதனை முடிவு அறிவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு என்ன காரணம் என்று உயர்நீதிமன்ற கிளை வினவியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்த விவரங்கள் என்ன? முன்கள பணியாளர்கள், மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் உள்ளதா? என்று மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் 8,357 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,934 பேர் குணமடைந்துள்ளனர். 3,263 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மதுரையில் 160 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த  வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,  மதுரை, கோவை,தென்காசி, தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.



Tags : Corona ,Madurai ,branch ,High Court , Madurai, Corona
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...