×

தென்காசியில் ஜமுனா பாய் என்பவரின் கணவர் தற்கொலை குறித்து டி.எஸ்.பி.விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில்  போலீஸ் தாக்கியதால் மனமுடைந்து தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஜமுனா பாய் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இந்த மனுவை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜமுனா பாய் என்பவரின் கணவர் தற்கொலை குறித்து டி.எஸ்.பி.விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலைய எல்கைக்குட்பட்டது குறும்பலாப்பேரி. இங்குள்ள ஆவுடைக்கண் நாடார் தெருவினைச் சேர்ந்த ஜமுனாபாய் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த அருள்குமார் என்ற அருணாசலத்திற்கும் எனக்கும் திருமணம் நடந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் மீன் விற்பனை செய்து குடும்பத்தினை நடத்தி வந்தோம். கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போதுமான மீன்வரத்து இல்லாததால் மீன் வியாபாரம் மந்தமான நிலையில் கீழப்பாவூர் உள்ளிட்ட ஊர்களின் குளத்தில் மீன்பிடித்து அப்பகுதியிலேயே மீன் வியாபாரம் செய்து வந்தார்.

இதனையடுத்து கடந்த மார்ச் 12ம் தேதி வியாபாரத்திற்கு சென்ற தனது கணவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை காவல் நிலையம் சென்றபோது தனது கணவரை அரை நிர்வாணமாக காவல்துறையினர் தாக்கி வீட்டிற்கு அனுப்பினர். இதனால் மனமுடைந்த எனது கணவர் மறுநாள் காலையில் வெளியே சென்று விஷமருந்தி தற்கொலை செய்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து என்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணமான காவல்துறையினர் மீது  மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாநில முதல்வர் வரை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் இப்பொழுது நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜமுனா பாய் என்பவரின் கணவர் தற்கொலை குறித்து டி.எஸ்.பி.விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Tenkasi ,Jamuna Boy ,Madurai High Court ,suicide , Tenkasi, Suicide, DSP Investigation, Madurai High Court Branch
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...