×

நாகர்கோவிலில் கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்!: கொரோனா சிகிச்சை விவரம், முடிவுகளை அன்றாட வெளியிட கோரிக்கை

கன்னியாகுமரி: நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா
நோயாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தினசரி
வெளியிடப்படும் நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள், முடிவுகள் எதுவும் கடந்த 5 நாட்களாக
தெரிவிக்கப்படாமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுவே நோயாளிகள் போராட்டத்தில்
ஈடுபட்டதற்கு காரணமாகும்.

இதனை தொடர்ந்து, கொரோனா வார்டு கதவை பூட்டி, மருத்துவமனை ஊழியர்களுடன் கொரோனா நோயாளிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.  5 நாட்களாக சிகிச்சை முடிவுகள் வெளிவராததால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரும் மருத்துவமனையிலேயே தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றாடம் சிகிச்சை விவர முடிவுகளை வெளியிட்டு குணமடைபவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கை. நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் தற்போது சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பும், பரவலும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,319 ஆக இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,449 ஆக
அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Nagercoil , Corona patients protest in Nagercoil !: Corona treatment details, Request to publish results daily
× RELATED கொரோனா நோயாளிகள் 400 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை