×

பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தந்தாலும் பத்திரிகையாளர்கள் பக்கமே அரசு துணை நிற்கும் : அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!!!

சென்னை : பெரியார் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை திருவான்மியூரில் இந்திய ஊடக சங்கம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது,இத்தகைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், உலகிற்கு செய்தி அளிக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடும், தன்னலமற்ற தியாகத்தோடும் பத்திரிகையாளர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்திய ஊடக சங்கம் சார்பில் 17வது கட்டமாக பத்திரிகையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களின் நலனில் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது. ஜனநாயகத்தின் 4வது தூணான பத்திரிகை துறையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். பத்திரிகை சுதந்திரத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தந்தாலும் பத்திரிகையாளர் பக்கமே அரசு துணை நிற்கும். பெரியார் பற்றி அவதூறு பரப்புவோரை சைபர் கிரைம் போலீஸ் கண்காணித்து வருகிறது.பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் முறையாக பாதுகாக்கப்பட வேண்டும். பெரியார் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.


Tags : Jayakumar ,government ,journalists , Press, Freedom, Central Government, Pressure, Journalists, Government, Deputy, Minister Jayakumar
× RELATED எண்ணி முடிக்கவே 2...