×

முதலீடு வரம்பில் மாற்றம் குறு, சிறு தொழில்கள் அடையாளம் இழக்கும்: மாற்றியமைக்க டேக்ட் கோரிக்கை

கோவை:  மத்திய எம்.எஸ்.எம்.இ அமைச்சர் நிதின்கட்காரிக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு(டேக்ட்) சார்பாக மனு அனுப்பபட்டுள்ளது. இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது: மத்திய அரசு தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரம்புகளை மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.25 லட்சம் முதலீடாக இருந்த குறுந்தொழில் வரம்பு தற்போது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் 5 கோடியாக இருந்த சிறு தொழில் முதலீடு ரூ.50 கோடியாக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள குறு, சிறு தொழில்களின் எண்ணிக்கை 85 சதவீதம் ஆகும். குறு சிறு தொழில் நடத்துகின்ற தொழில் முனைவோர்களுக்கு அதன் மூலம் அரசு சில சலுகைகளை வழங்கி வந்தன.

தற்போது அறிவித்துள்ள இந்த அறிவிப்புகளால் குறு, சிறு தொழில்களின் அடையாளங்கள் இழக்கப்படும். குறிப்பாக ஏற்கனவே உத்தியாக்கு ஆதார் அடிப்படையில் காட்டேஜ் என்று தொழிலில்களின் அடையாளம் இழக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு கொண்டுவந்துள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் முதலீடுகள் மாற்றத்தினால் உண்மையில் குறு, சிறு தொழில்கள் தனது அடையாளங்களை இழக்கும். மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள முதலீட்டு அளவுகளையும் உற்பத்திக்கு அறிவித்துள்ள அளவுகளும் மாற்றி அமைக்க வேண்டும்.  கோவையின் தொழில் கூட்டமைப்பின் சார்பில் குறுந்தொழில்கள் ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கான அளவுகளும் 5 கோடி கான உற்பத்தியும், சிறு தொழில்களுக்கு ஐந்து கோடிக்கான முதலீடும் பத்து கோடிக்கான உற்பத்தியும், காட்டேஜ் தொழில்களை பாதுகாக்க 25 லட்சம் வரை முதலீடுகளும் ஒரு கோடி ரூபாய் உற்பத்தியும் என வரம்பை அரசு அறிவிக்க வேண்டும்.

மேலும் காட்டேஜ், குறு, சிறு தொழில்களை உள்ளடக்கி ஒரு தனி அமைச்சரை மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காட்டேஜ், குறு, சிறு தொழில் நிறுவனங்களிடமிருந்து குறைந்தபட்சம் 50 சதவீதமான ஆர்டர்கள் பெறவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும்.  இவ்வாறு ஜேம்ஸ் கூறியுள்ளார்.

Tags : businesses , Investment, Micro, Small Businesses, Dect
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...