×

குளத்தூர் அருகே ஓராண்டாக தொடரும் அவலம்: கிராம ஊரணி வரத்து கால்வாய் கரை உடைப்பு: விரைவில் சீரமைக்கப்படுமா?

குளத்தூர்: குளத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தில் கிராம ஊரணி நீர்வரத்து கால்வாய் கரை ஓராண்டுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்ட போதும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அவதிப்படும் விவசாயிகள், இது விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், வேப்பலோடை ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாசலபுரம் கிராமம். குளத்தூர் அருகே இக்கிராமத்தின் மேற்கு பகுதியில் கீழ ஊரணி  உள்ளது. கடந்தாண்டு பெய்த பருவமழையில் பெருக்கெடுத்த தண்ணீரானது குறிப்பாக இவ்வூரணியின் நீர்வரத்து கால்வாய் கரை  உடைப்பு ஏற்பட்டு அருகேயுள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் வெள்ளமாக  சென்று பெரிய அளவில் சேதங்களை உருவாக்கியது.

இவ்வாறு தொடர்ந்து கிராம ஊரணி நீர்வரத்து கால்வாய் கரை உடைந்த நிலையிலேயே சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்தாண்டு அதிக அளவில் பருவமழை பெய்யும்போது மேலும் பெரிதாக சேதமடைய வாய்ப்புள்ளது. அதற்குள் இக்கரையை சீரமைத்தால்தான்  ஊரணியில் தண்ணீர் பெருக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வாய்ப்பு ஏற்படும்.  எனவே,  நடப்பாண்டு பருவமழை துவங்கும்முன்பாக நீர்வரத்து கால்வாய் கரைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் துரித நடவடிக்கை முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் உள்ளனர்.

Tags : Kulathur ,Village Urani ,canal breach , Kulathur, Grama Urani, Canal, Karai
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா