×

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞர் கேரளாவில் கைது!: போலீசார் அதிரடி

திருவனந்தபுரம்: காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்
கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காதலிக்க மறுத்ததால் பேரூர் ஆர்.எம். கார்டனை சேர்ந்த
சக்திவேல் என்பவரது மகள் ஐஸ்வர்யா என்பவரே கொல்லப்பட்டவராவார். தனியார் கல்லூரியில்
பி.காம் 2ம் ஆண்டு படித்து வரும் அவரும், அதே பகுதியை சேர்ந்த ரத்திஷ் என்பவரும் காதலித்து
வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஐஸ்வர்யா குடும்பத்தினர் ரத்திஷை கண்டித்துள்ளனர்.

மேலும் காதலை கைவிட்டு, படிப்பில் கவனம் செலுத்துமாறு ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளனர்.
பெற்றோரின் கண்டிப்பால் ஐஸ்வர்யா வேறு வழியின்றி, ரத்திசுடனான காதலை துண்டித்தார்.
தொடர்ந்து, அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த
ரத்திஷ், காதலிக்க வற்புறுத்தி நள்ளிரவில் ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொள்ளாததால், ஐஸ்வர்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த
சம்பவத்தில் தடுக்க வந்த தந்தை சக்திவேலும் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் சிதைந்த
ஐஸ்வர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல் நிலையத்தினர் 2 தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய ரத்திஷை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரத்திஷை போலீசார் அதிரடியாக கைது
செய்தனர். தற்போது ரத்திஸிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Kerala ,death ,Police Action , The young man who stabbed the woman who refused to fall in love to death and escaped Arrested in Kerala !: Police Action
× RELATED முதியவரிடம் வழிப்பறி