×

தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தலைவர் ஸ்டாலின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி : ஆர்.எஸ்.பாரதி புகார் மனு!!

சென்னை : திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக போலீசிடம் திமுக புகார் அளித்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற அமைப்புக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தது போல் கருத்து பதிவிட்டதாக புகாரில் குற்றம் சாட்டப்படுகிறது. கந்த சஷ்டியை அவமதித்த கருப்பர் கூட்டத்தின் செயலை திமுக எதிர்க்கும் நிலையில், இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க ஸ்டாலின் பெயரில், அவதூறு பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.  

திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில், முருகனை இழிவுபடுத்திப் பேசியுள்ள கருப்பர் கூட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என்று ஒரு போலியான தகவலை ஸ்டாலின் பெயரில் போலியாகப் பதிவிட்டுள்ளனர். இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டவர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைமிலும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பெயரில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் நெருங்கி வருவதால் திமுக மற்றும் ஸ்டாலின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி நடப்பதாக சாடினார்.


Tags : Stalin ,election ,Bharathi ,DMK , Election, DMK, Stalin, reputation, riot, result, attempt, RS Bharathi, complaint, petition
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக சாகும்வரை...