×

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பாதிப்பு எதிரொலி..: ஷின்ஜியாங் மாகாணத்தில் போர்க்கால அவசரநிலை பிரகடனம்

ஷின்ஜியாங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் போர்க்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி – மார்ச் மாதத்துக்குப் பின் பெரியளவில் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 20 நாடுகளில் கூட சீனா இடம்பெறவில்லை.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, சீனாவில் இதுவரை 83,682 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது, 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சீனாவின் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அங்கு போர்க்கால அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 47 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : China ,emergency ,province ,Xinjiang ,outbreak ,wave , China, Corona, Xinjiang, wartime emergency
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...