×

பழந்தமிழரின் புகழை உலகறிய செய்ய கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம்: சென்னையில் இருந்தபடி அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி..!!!

சென்னை: கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணியின்போது குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், நாணயம், மணிகள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் மாதிரியானவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழாய்வுகளின் மூலம் கண்டெடுக்கபட்ட தொல் பொருட்களை வருங்கால சந்ததியினர்கள், மாணவ, மாணவியர்கள், அறிஞர்கள் தொல்லியல் வல்லுனர்கள் மற்றும் அயல் நாட்டு அறிஞர்கள் அறியும் வகையில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அகழ்வைப்பகம் அமைப்பது இன்றையமையாகிறது. பழந்தமிழரின் புகழை உலகறிய செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த சூழலில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், தொல்லியல் ஆய்வுவாயிலாக, தமிழர் பெருமையினை பறைசாற்றிட, சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.12.25 கோடியில் உருவாகும் உலகத்தரம் மிக்க அகழ்வைப்பகத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முதன்மை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அருங்காட்சியம்:

இந்த அகழ்வைப்பகம் திருப்புவனம் அருகே கொந்தகை கிராமத்தில் 0.810 ஏர்ஸ் நிலத்தில் உலக தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கொந்தகையில் அமைக்கப்படுகிறது. அதன்படி ரூ.6.56 கோடி செலவில் காட்சி அறைகள், ஒப்பனை அறை, நிர்வாக கூடம், சேமிப்பு கிடங்கு, சிற்றுண்டி கடை மற்றும் நூல் விற்பனை கடையுடன் கூடிய விரிந்த அகழ்வைப்பக வளாகம் அமைத்தல். ரூ.64 லட்சம் செலவில் பார்வையாளர் பயனீட்டு தொடர்பான விளக்க அட்டை, குடிநீர் மையங்கள், தொல் பொருட்களை அகழ்வைப்பகத்தில் காட்சிப்டுத்தல்,


ரூ.96 லட்சம் செலவில் பிளம்பிங், தீயணைப்பு வசதிகள், தண்ணீர் தெளிப்பான்கள், ரூ.1.89 கோடி செலவில் மின்சாதனங்கள், மின் விளக்குகள், இஎல்வி குளிரூட்டிகள், தீ எச்சரிக்கை கருவிகள். ரூ.23 லட்சம் செலவில் காட்சிப்படுத்த விளக்க அட்டைகள், குறிப்புகள், வழிகாட்டி பலகைகள் மற்றும் இதர காட்சியமைப்பு பொருட்கள் உட்பட ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.



Tags : Palanisamy ,museum ,Palanthamil ,Chennai ,world , Rs 12 crore museum below to make the fame of Palanthamil known to the world: Chief Minister Palanisamy laid the foundation stone as it was in Chennai .. !!!
× RELATED ஸ்ரீவாரி அருங்காட்சியகம்