×

உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று

சென்னை: சென்னையில் ஊரடங்கு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ராயப்பேட்டை உதவி கமிஷனர் உட்பட 10 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை காவல் துறையில் நேற்று வரை 1,527 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று தொற்றில் இருந்து 10 போலீசார் குணமடைந்து வீடு திரும்பினர். தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,032 பேர் பணிக்கு திரும்பி உள்ளனர்.

Tags : Corona ,Assistant Commissioner , To the Assistant Commissioner, Corona, Infection
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி