×

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண் மீட்பு

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாக, 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண் சுற்றித்திரிவதாக அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் பிறான்வின் டெனி மற்றும் போலீசார் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்எம்டிஏ பிரதான சாலையோரம் ஒரு பெண் குளிரில் நடுங்கி கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் பிறான்வின் டெனி, அந்த பெண்ணிடம் சென்று விசாரித்தார். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர், அவரை குளிக்க வைத்து, புதிய உடை மற்றும் டீ, சாப்பாடு, போர்வை ஆகியவற்றை வாங்கி கொடுத்தார். பின்னர் அவரை வேனில் ஏற்றி, சென்னை மாநகர நகர்ப்புற காப்பக உதவி ஒருங்கிணைப்பாளர் மெர்வினிடம் ஒப்படைத்தார்.

Tags : road , Road, wandering, mental health, woman, recovery
× RELATED மீட்பு விமானத்தில் தங்கம் கடத்திய 4 பேர் சிக்கினர்