பிஇ, பிடெக் முதுநிலை படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் எப்போது? அமைச்சர் விளக்கம்

சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

பிஇ, பிடெக் படிப்புகளுக்குஇதுவரை ஆன்லைன் மூலம் 55 ஆயிரத்து 995 மாணவ மாணவியர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் 36 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 16ம் தேதியுடன் விண்ணப்பம் பதிவு செய்வது முடிகிறது. “ பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையும், பகுதி நேர பிஇ, பிடெக், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கான கவுன்சலிங்கும் இணைய தளம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளை பொறுத்தவரையில் கடந்த 2015-2016ம் ஆண்டு முதல் 2019-2020 வரை பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கோவையில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரியில் நேரடி கவுன்சலிங் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது பகுதி நேர படிப்புகளுக்கான கவுன்சலிங் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கையும் இணைய தளம் மூலம் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பும், இணைய தள முகவரியும் பின்னர் அறிவிக்கப்படும். இது தவிர, எம்பிஏ, எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கையும் இணைய தளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.

Related Stories:

>