×

மக்கள் நம்பிக்கை, உணர்வுகளை புண்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும்: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: மக்கள் நம்பிக்கை, உணர்வுகளை புண்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடையும் என்று தமிழக அரசை கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் தந்தை பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் களங்கப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அதே பகுதியில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்கள் உணர்வுகளை புண்படுத்துகிற நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

சி.சி.டி.வி. காமரா பதிவுகள் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துகிற வகையில் கருப்பர்கூட்டம் என்கிற அமைப்பு யூடியூப் மூலம் பதிவுகள் வெளியிட்டு மக்கள் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன.சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் நம்பிக்கைகளை புண்படுத்துவது, வெறுப்பை வளர்ப்பது, அவதூறுகளை பரப்புவது, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சமூக விரோதிகளை உடனுக்குடன் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, மக்கள் உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இத்தகைய மக்கள்விரோத செயல்கள் தொடர்வதை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,KS Alagiri , People's trust, sentiment, law and order disorder, Government of Tamil Nadu, KS Alagiri, warning
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...