×

உஷாரா இருங்க…! மழையும், குளிரும் கொரோனா தோஸ்த்

புவனேஸ்வர்: மழை மற்றும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் போது கொரோனா பரவல் தீவிரமடையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒடிசாவில் உள்ள ஐஐடி புவனேஸ்வர் மற்றும் எய்ம்ஸ் ஆய்வாளர்கள், இந்தியா தட்பவெப்பநிலைகளில் கொரோனா வைரசின் பரவல் குறித்து ஆய்வு நடத்தினர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 28 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவு குறித்து ஐஐடி உதவி பேராசிரியர் வினோஜ் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலில் தட்பவெப்ப நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக வெப்பமான தட்பவெப்ப நிலையில் இதன் பரவல் குறைவாகவே இருக்கும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் போது, 0.99 சதவீத பாதிப்பு குறையும், இரட்டிப்பாகும் கால அளவில் 1.13 நாட்கள் அதிகரிக்கும்.

அதே சமயம், மழைக்காலத்திலும், குளிர் காலத்திலும் வெப்பநிலை குறைவது கொரோனா பரவலுக்கு சாதகமாக இருக்கும். இதில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம், இரட்டிப்பாகும் கால அளவும் குறையலாம். ஆனாலும், இந்த கணிப்புகளை உறுதிப்படுத்த மழை, குளிர் காலம் தீவிரமடையும் போது பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். மழை, குளிர் காலத்தில் மற்ற நாட்களைக் காட்டிலும் சராசரியாக 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும். இது, கொரோனா பரவல் தீவிரமடைய வழிவகுக்கும் என்பதால் சுகாதார பணியாளர்களும், அரசுகளும் வைரசை கட்டுப்படுத்துவதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Cold Corona Dost , Stay tuned! , Rain, Cold, Corona, Dost
× RELATED ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை...