×

போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், அன்னை மரியா நகரைச் சேர்ந்தவர் சண்முகம் (66). ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இந்நிலையில், இவரது வீட்டின் பீரோவை உடைத்து 8 சவரன் நகைகள், ரூ.2.20 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 


Tags : Police officer ,home , Police officer, home, robbery
× RELATED கெல்லீஸ் குழந்தைகள் இல்ல வளாகத்தில்...