×

டிரைவருக்கு அடி : இருவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த சேக்காடு, ரெட்டி தெருவை சேர்ந்தவர் காமராஜ் (33). கார் டிரைவர். இவர், ஆவடி காமராஜர் நகர், ஆற்றோர தெருவில் வசிக்கும் ஜெயக்குமார் (27) என்பவரிடம் கடந்த 5 மாதத்துக்கு முன்பு ரூ.10 ஆயிரம் கடனாக வாங்கினார். அதனை, ஜெயக்குமார் பலமுறை காமராஜிடம் கேட்டுள்ளார் தரவில்லை. இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஜெயக்குமார், ஆவடியை சேர்ந்த பிரபல ரவுடி லட்சுமணன் உள்பட 3 பேர் காமராஜ் வீட்டுக்கு வந்து காமராஜிடம் கடனைக்கேட்டு மிரட்டினர்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் ரவுடி லட்சுமணன் உள்பட அனைவரும் சேர்ந்து காமராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தனர். இதில், அவருக்கு தலை, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் காமராஜை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், தினேஷ் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரவுடி லட்சுமணன், அவரது கூட்டாளி காமேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Two , Driver beaten, two, arrested
× RELATED பண மோசடி புகாரை வாங்க மறுப்பு; காவல்...