×

மாணவிக்கு எம்எல்ஏ பரிசு

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், கீழ்நல்லாத்தூர் திமுக பிரமுகர் செல்வராஜ் மகள் எஸ்.ஹேமபூஜா திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்தார். இதையொட்டி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ அவரது வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ரூ.10 ஆயிரம் பரிசு ரொக்கப் பரிசு வழங்கினார். அப்போது, திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், கிழக்கு ஒன்றிய ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.மோகனசுந்தரம், கொப்பூர் டி.திலீப்குமார், மங்காத்தாகுளம் ரவி, எல்லப்பன், டி.வி.முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.   


Tags : MLA ,student , Student, MLA, Prize
× RELATED சிவகங்கை அதிமுக மாஜி எம்எல்ஏ மரணம்