×

குடிநீர் நிலையத்தில் புகுந்த லாரி

புழல்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கெமிக்கல் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொரியர் சர்வீஸ் லாரி திண்டிவனம் செல்வதற்காக நேற்று அதிகாலை சென்னைக்கு வந்தது. புழல் மத்திய சிறைச்சாலை ஜி.என்.டி.சாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த காந்தி பிரதான சாலையில் திரும்பி இடது பக்கத்தில் இருந்த அம்மா குடிநீர் வளாகத்தில் புகுந்தது. இதில், வளாகத்தில் இருந்த தூண்கள், இரும்பு கேட் உடைந்து சேதமடைந்தது. மேலும், அருகில் இருந்த ஒரு பைக்கும் சேதமடைந்தது. தகவலறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அப்போது, லாரியின் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் திண்டிவனம் தாலுகா சொக்கத்தாங்கள் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (26). என்பது தெரியவந்தது. 


Tags : drinking water station , Drinking water station, boarding truck
× RELATED சாலையை தரமாக அமைக்கக் கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்