×

தெலுங்கானாவில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் சாலை, கட்டிடங்கள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் மறுஆய்வு செய்ய உள்ளதாக தகவல்..!!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் சாலை, கட்டிடங்கள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் மறுஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் அரசின் புரட்சிகரமான நடவடிக்கைகளாலும், வளமான மண் போன்ற சிறந்த காலநிலைகளும் உள்ளதால் விவசாய மாநிலமாக மாறி வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை காக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் மாநில அரசு பல்வேறு சிறப்பான பலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானாவின் விவசாயத்திற்கு தென்மேற்கு பருவமழை மிக முக்கியமான இயற்கை நன்மையாகும். மேலும் அதிகரித்து வரும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அணைகள் உட்பட முக்கிய நீர்த்தேக்கங்களால் முக்கிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்ற நிலையில் மாநிலம் முழுவதும் மழை தீவிரமாகி வருகிறது.

இதனையடுத்து மாநிலத்தின் 25 மாவட்டங்களில் சராசரியை விட சுமார் 20 சதவீதம் மற்றும் அதற்கும் மேல் மழைப்பொழிவு உள்ளதால், பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய பொறியியல் துறைகள் குறித்து நாளை மற்றும் அதற்கு மறுநாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆய்வு செய்ய உள்ளார். அதன்படி, நாளை மதியம் தெலுங்கானாவின் நீர்ப்பாசன திட்டம் குறித்தும், நாளை மறுநாள் சாலை மற்றும் கட்டிட துறையை மறு ஆய்வு செய்வார்.

இந்த மறு ஆய்வு கூட்டங்களில் துறைவாரியான அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடனிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் நடத்தப்பட்ட மறுஆய்வு கூட்டத்தில் அதற்கான வரைவுகளை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மறுபுறம், உத்தேச புதிய கட்டிடங்கள் குறித்து மறு ஆய்வு செய்து, தெலுங்கானாவின் மரபு மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் கட்டிடங்களாக அமைக்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கான தொடர்முடிவுகள் முதல்வரின் ஆலோசனைக்கு பின் டெண்டர் மூலம் பணி துவங்கும் என அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chandrasekara Rao ,Telangana ,roads ,buildings , Telangana, Irrigation Projects, Roads, Buildings, Chief Minister Chandrasekara Rao, Review, Information .. !!
× RELATED வனப்பகுதியில் 1 மணி நேரம் துப்பாக்கி...